மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா
கார் தயாரிப்பில் இரண்டாமிடத்தில் உள்ள தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் மேம்பட்ட ரகத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக இந் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடலில் இது 6-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். முந்தைய மாடலைக் காட்டி லும் இதன் வெளிப்புற வடிவமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன் முன்புற கிரில் வடிவமைப்பு உள்ளது. பம்பர் வில்லின் முனைப்பகுதி வடிவமைப்பு கொண்டது. இது காரின் தோற்றப் பொலிவை மேலும் மெருகேற்றி யுள்ளது. டயமண்ட் கட் அலாய் சக்கரம் இதற்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. இது 1.5 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.
இது 160 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். 6 மேனுவல் கியர் வசதி மற்றும் 7 டி.சி.டி. ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டதாக இது வந்துள்ளது.
Related Tags :
Next Story