ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர்


ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர்
x

இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் மாடலில் 160 ஆர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.17 லட்சம். முந்தைய மாடலின் விலையை சிறிதும் உயர்த்தாமல் பல்வேறு சிறப்பம்சங்களை உடைய இந்த மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாகனம் எந்த கியரில் செல்கிறது என்பதை உணர்த்தும் இன்டிகேட்டர் இதில் கூடுதலாக சேர்க்கப் பட்டுள்ளது. இருக்கைகளின் வடிவமைப்பும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

இது 163 சி.சி. திறன், ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டது. இது 15 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். இழுவிசையிலும் வெளிப்படுத்தும்.

டியூபுலர் டயமண்ட் வடிவிலான பிரேம், டெலஸ் கோப்பிக் முன்புற ஷாக் அப்சார்பர் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஒற்றை ஷாக் அப்சார்பரைக் கொண்டது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.1.20 லட்சம்.


Next Story