ஹீரோ மோட்டோ கார்ப் எக்ஸ் பல்ஸ் 200 4 வி


ஹீரோ மோட்டோ கார்ப் எக்ஸ் பல்ஸ் 200 4 வி
x

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இந்திய நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் தனது எக்ஸ் பல்ஸ் 200 4 வி மாடலில் ரேலி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

நீண்ட தூர பயணத்துக்கேற்ற அனைத்து உதிரி பாகங்களும் ஆலையிலேயே சேர்க்கப்பட்டு முழுமையான நீண்ட தூர பயணத்துக்கேற்ற மோட்டார் சைக்கிளாக வந்துள்ளது. இதில் மோட்டார் பந்தய வீரர் சி.எஸ். சந்தோஷின் கையொப்பம் இடம் பெற்றுள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,52,100.

இது 200 சி.சி. 4 வால்வு லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. 18.9 பி.ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.

இது 5 ஸ்பீடு கியர்களைக் கொண்டது. நீண்ட தூர பயணத்துக் கேற்ற வகையில் முன்புற சஸ்பென்ஷன் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலானது. அதேபோல 10 நிலைகளில் பின்புற சஸ்பென்ஷனை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இதன் எடை 160 கிலோ. இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, கியர் இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.


Next Story