Happy Kiss Day 2023: அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா...! இன்று முத்த தினம்
சில சமயங்களில் முத்தமிடுவது காதல் உணர்வுக்கு வழிவகுக்கும். எனவே திருமணமாகாதவர்கள் முத்தத்தை எல்லை மீற விடக்கூடாது
காதலர் தினத்திற்கு முந்தைய நாள் முத்த தினமாகும். முத்த தினமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து காதலர் தினத்திற்கு முந்தைய நாளான இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது.
முத்த தினத்தில், உங்கள் அன்புக்குரியவருக்கு அன்புடன் ஒரு முத்தம் கொடுங்கள், அந்த அன்பு வலுவடையும். ஆனால் முத்தம் என்பது ஒரு காதல் உணர்வு. காதலர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் உடனே முத்தமிடுவார்கள்.
முத்தங்கள் மனதிற்கு நல்லது. முத்தம் என்பது இரண்டு காதலர்களுக்கு இடையே மட்டும் அல்ல, அது நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு கொடுப்பது போல் அவர்களின் இதயங்களுக்கும் ஹாய் கொடுக்கிறது. நீங்கள் விரும்பும் ஒருவருக்கு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு முத்தம் ஒரு சிறந்த வழியாகும்.
முத்தத்தால் சில நன்மைகளும் உண்டு. முத்தம் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்கும். ஆனால் அந்த முத்தம் உதடுகளில் மட்டுமல்ல கன்னத்திலும் நெற்றியிலும் அன்புடன் இருக்கிறது.
நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டால் புது உற்சாகம் கிடைக்கும். மேலும் முத்தமிடுவதன் மூலம் தலைவலியை எளிதில் போக்கலாம். மேலும், பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. இது தவிர, முத்தம் இரத்த அழுத்தத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலும், வலியைப் போக்க ஒரு முத்தத்தையும் பயன்படுத்தலாம்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. எந்த விஷயத்திலும் முத்தமிடுவது உடலுக்கு மிகவும் நிதானமாக இருக்கும்.
சில சமயங்களில் முத்தமிடுவது காதல் உணர்வுக்கு வழிவகுக்கும். எனவே திருமணமாகாதவர்கள் முத்தத்தை எல்லை மீற விடக்கூடாது
முத்த வகைகள்
முத்தம் என்பது உணர்வுகளை வெளிப்பாடாகும். முத்தத்தில் பல வித முத்தங்கள் இருக்கின்றன. முத்தத்தில் நூறு வகைகள் உள்ளன, ஒவ்வொரு முத்தமும் ஒவ்வொரு வகையான உணர்வை தரக்கூடியது.
ஒரு காதலனோ, காதலியோ தனது அன்பானவருக்கு நெற்றியில் முத்தமிடுவது அம்மாவை போன்று பாசத்தையும், அக்கறையையும் காட்டுவதாகும்.
மூக்கில் முத்தமிடுவது காதலன்/ காதலி மிகவும் அழகாய் இருக்கிறாய் என்பதை சொல்லும் விதமாக கொடுப்பதாம். இது ரொமாண்டிக்கான ஒரு விஷயமாகவும் இருக்கிறதாம்.
காதலன்/காதலி உதட்டில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை அவரின் உயிருக்கும் மேலாக விரும்புவதாக அர்த்தமாம்.
காதலன் காதலிக்கு அவரின் கைகளில் முத்தமிட்டால் அவரை மிகவும் நேசிப்பதாகவும், மதிப்பதாகவும் அர்த்தம்.
காதலன் காதலியிடையே கூடலின் போது பின்னால் இருந்து அணைத்து கழுத்தில் முத்தமிடுவது மிகவும் ரொமாண்டிக்கான முத்தமாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு விரலாய் முத்தமிடுவது என்பது என் உலகமே நீதான் என்று சொல்லாமல் சொல்வதாகும்.
காதலன், காதலி கண்களில் முத்தமிடுவது உன்னை என் கண்ணுக்குள் வைத்து காலம் முழுவதும் பார்த்துக் கொள்வேன். தனது துணையின் முக்கியத்துவத்தை இந்த முத்தம் கூறுவதாய் அமையும்.
கன்னத்தில் முத்தம் கொடுப்பது என்பது பொதுவாக உங்க துணை நட்பாக இருக்கவும் பாசத்தை வெளிப்படுத்துவதையும் குறிக்கும்.
முத்தத்தால் ஏற்படும் நன்மைகள்
காதலை, பரிவை, காமத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் முத்தம். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் நடு ரோட்டில் யாரென்றே தெரியாத ஒருவருக்கு முத்தம் கொடுப்பதுகூட சகஜமான ஒன்று.
ஒருவரை வரவேற்கும் விதமாக, நட்பை வெளிப்படுத்துவதற்காக, மரியாதை கொடுப்பதற்காக இப்படிச் செய்வார்கள். சில நாடுகளில் ஒரு முறை, சில நாடுகளில் இரு முறை, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மூன்று முறை முத்தம் கொடுப்பதெல்லாம் வழக்கம்.
முத்தத்தை எதற்காக இப்படி எல்லோருக்கும் மரியாதை நிமித்தமாகவும், அன்பின் பரிமாற்றமாகவும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது தரும் மருத்துவப் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஒரு முத்தம்... என்னவெல்லாம் செய்யும்?ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.ஒரு சிறிய முத்தத்தில் உதடுகளுக்கு அருகேயிருக்கும் இரண்டு தசைகள் உள்பட, முகத்திலிருக்கும் 12 தசைகளுக்கு வேலை கொடுக்கிறோம்.
ஆழமான முத்தத்தில் 34 முகத்தசைகள் தூண்டப்படுகின்றன.முத்தம் முகத்திலிருக்கும் 34 தசைகளை இயங்கவைத்து, அவற்றை ஆரோக்கியமாக்கி, முகப்பொலிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளர்ச்சி கிடைக்கும்; ரத்தநாளங்கள் விரிந்து கொடுக்கும்; இதயத் துடிப்பு 58% அதிகரிக்கும்.முத்தம் கொடுக்கும்போது பரிமாறப்படும் உமிழ்நீரில் புரதம் : 0.7 மி.கிராம் இருக்கிறது, கொழுப்பு 0.71 மி.கிராம் இருக்கிறது, உப்பு : 0.45 மி.கிராம் இருக்கிறது, நீர் : 60. மி.கி இருக்கிறது.10 விநாடி கொடுக்கப்படும் முத்தத்தின் மூலமாக 9 மி.லி உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
உணர்ச்சிகளுக்குக் காரணமாகும் அட்ரினலின் ஹார்மோன்சுரப்பது அதிகமாகும். மகிழ்ச்சிக்குக் காரணமான செரோட்டோனின் சுரப்பு அதிகரிக்கும்.மன அமைதிக்கு உதவும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும்.கோபம், உடல் பருமன், கொழுப்பு ஆகியவற்றுக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பு குறையும்.எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்குச் சமமாக, முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும்.
66% பேர் முத்தமிடுகையில் தங்கள் கண்களை இறுக மூடிக்கொள்கின்றனர். மீதிப் பேர் மட்டுமே கண்களைத் திறந்த படி, தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர்.
ஒரு மனிதன் தனது வாழ்நாளில் முத்தத்துக்காகச் செலவிடுவது 306 மணி நேரம். நம் உதடுகளின் சென்சிடிவானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது.
மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டுக் கொள்பவர்களின் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்குச் செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறதாம்.
முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும். அதேநேரம் ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்கும் அப்படினு சொல்லப்படுகிறது.
உடல் பருமனாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.
முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு பிலிமடாலஜி என்று பெயர். தொடர்ந்து 1 நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுக்கும் போது 26 கலோரிகள் வரை எரிக்கப்படுகின்றன.
முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம். அதற்கு காரணம், நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொள்வதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.