எலிகள் உயிர்வாழ குறைந்த ஆக்சிஜன் போதும்..!


எலிகள் உயிர்வாழ குறைந்த ஆக்சிஜன் போதும்..!
x

ஆப்பிரிக்க எலியானது மிகக் குறைந்த ஆக்சிஜனை சுவாசித்தும் பாதிப்பின்றி நடமாடி உயிர்வாழ்வதும் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எலிகள் உண்மையில் சூப்பர் ஹீரோக்கள்தான். இல்லையெனில் பஞ்சத்திலும் எப்படி அவை உயிர்பிழைக்க முடியும்? தற்போது கிழக்கு ஆப்பிரிக்க எலியானது மிகக் குறைந்த ஆக்சிஜனை சுவாசித்தும் பாதிப்பின்றி நடமாடி உயிர்வாழ்வதும் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிளாபர் என்ற வகை எலியை 5 சதவிகிதம் ஆக்சிஜன் மட்டுமே உள்ள தொட்டியில் அடைத்து வைத்தனர். இதில் இயல்பான எலிகளால் 15 நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் கிளாபர் வகை எலிகள் ஏறத்தாழ 18 நிமிடங்கள் தாக்குப்பிடித்தன.

மூச்சு குறைந்தாலும் இதயத்துடிப்பு இருந்தது. தொட்டியில் இருந்து அவற்றை அகற்றி காற்றோட்ட சூழலுக்கு கொண்டு வந்ததும் அவை உயிர் பிழைத்துக்கொண்டன.

"தொட்டியிலிருந்த எலிகளுக்கு பெரிய பிரச்சினைகள் ஏதுமில்லை" என்று ஆவலாக பேசுகிறார் ஜெர்மனியின் மேக்ஸ் டெல்ப்ரக் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த கேரி லெவின். பாலூட்டிகளில் திமிங்கலங்கள் ஒரு மணிநேரம் மூச்சை தாக்குப்பிடிக்கக் கூடியவை.

"விலங்குகள் தம் உடல் செல்களிலுள்ள குளுக்கோஸை எரித்தே ஆற்றல் பெறுகின்றன. ஆக்சிஜன் இல்லாதபோது ஆற்றல் பெற அதிக குளுக்கோஸ் தேவை. இதில் உருவாகும் லாக்டிக் அமிலம் செல்களை அழிக்கிறது" என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜேன் ரெஷ்னிக்.


Next Story