போர்ஸ் அர்பானியா வேன்
புனேயைச் சேர்ந்த போர்ஸ் மோட்டார் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான நவீன வசதிகள் கொண்ட வேனை `அர்பானியா’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் மூன்று வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 11 பேர் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் பெரிய மாடலில் 17 பேர் பயணிக்க முடியும். டில்டிங் வசதி கொண்ட ஸ்டீயரிங் சக்கரம், அருகிலேயே கியர் மாற்றும் லீவர், 7 அங்குல எல்.சி.டி. தொடு திரை, உள்ளீடாக புளூடூத் இணைப்பு வசதி, ஆண்ட்ராய்டு, ஆப்பிள் கார் பிளே, ரியர் பார்க்கிங் வசதி, என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, சாயும் வகையிலான இருக்கை வசதி கொண்டது. இது 115 பி.ஹெச்.பி. திறனை வெளியிடும்.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.29.50 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.
Related Tags :
Next Story