டெல் ஏலியன்வேர் கேமிங் லேப்டாப்


டெல் ஏலியன்வேர் கேமிங் லேப்டாப்
x

டெல் நிறுவனம் வீடியோகேம் பிரியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் 6 மாடல்களில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டெல் நிறுவனம் வீடியோகேம் பிரியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் 6 மாடல்களில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. எம் 18, எம் 16, எக்ஸ் 16, எக்ஸ் 14, ஜி 16 மற்றும் ஜி 15 என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. அழகிய வடி வமைப்பைக் கொண்டுள்ளதாக இவை உருவாக்கப் பட்டுள்ளன.

இதில் தெர்மல் இன்டர்பேஸ் பொருள் பயன்படுத்தப் பட்டுள்ளதால் அதிக நேரம் உபயோகித்தாலும் வெப்பமடை யாது. இதனால் இதன் செயல் திறன் மேம்படும். கண்கவர் வண்ணங்களில் ஜி 15 மற்றும் ஜி 16 மாடல் லேப்டாப்கள் வந்துள்ளன. இதன் விலை சுமார் ரூ.70,330 முதல் சுமார் ரூ.2.40 லட்சம் வரை உள்ளது.


Next Story