பி.எம்.டபிள்யூ. ஆர்.9 டி.


பி.எம்.டபிள்யூ. ஆர்.9 டி.
x

சொகுசு மற்றும் பிரீமியம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆர்.9 டி. மற்றும் ஆர் 18 என்ற இரண்டு மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

இவை லிமிடெட் எடிஷன் மாடலாகும். 1922-ம் ஆண்டு பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் மேக்ஸ் பிரிஸ் வடிவமைத்த மாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. முதலாவது மோட்டார் சைக்கிள் ஆர் 32 என்ற பெயரில் 1923-ம் ஆண்டு வெளிவந்தது. இந்த மாடல் உருவாகி 100 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு தற்போது இவ்விரு மாடல்களிலும் லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது ஏர் கூல்டு என்ஜின் மற்றும் 2 சிலிண்டர் மற்றும் 4 ஸ்டிரோக் பாக்ஸர் என்ஜினைக் கொண்டது. நூற்றாண்டு நிகழ்வைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு மாடலி லும் 1923 மோட்டார் சைக்கிளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்தக்கால வடிவமைப்பை நினைவூட்டும் விதமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. ஆர்.9 டி மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.24 லட்சம். ஆர் 18 மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.25.90 லட்சம்.


Next Story