பி.எம்.டபிள்யூ. எம் 5 காம்படீஷன் எடிஷன்


பி.எம்.டபிள்யூ. எம் 5 காம்படீஷன் எடிஷன்
x

சொகுசுக் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எம் பிரிவின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எம் 5 காம்படீஷன் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.79 கோடி. முகப்பில் லேசர் விளக்கு மற்றும் கிரில்லை இணைக்கும் வகையில் எல் வடிவிலான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. எம் எழுத்து பிரத்யேகமாக முன்புறமும், பின்புறமும் தெரியும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த லோகோ சக்கரங்களிலும் தெரியும் வகையில் பொறிக்கப் பட்டுள்ளது.

பி.எம்.டபிள்யூ. கார்களின் தனித்துவமான அடையாளமாகத் திகழும் கிட்னி வடிவிலான கிரில் நடுவிலும் எம் லோகோ இடம்பெற்றுள்ளது. இதில் அதிக செயல்திறன் மிக்க வி 8 என்ஜின் உள்ளது. இது 625 ஹெச்.பி. திறனையும், 750 நியூட்டன் மீட்டர் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதனால் காரை ஸ்டார்ட் செய்து 3.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் 8 ஆட்டோமேடிக் ஸ்டெப்ட்ரானிக் கியர்கள் உள்ளன. உள்புறம் 12.3 அங்குல முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை உள்ளது.

அதேபோல 12.3 அங்குல கண்ட்ரோல் டிஸ்பிளே வசதியும் உள்ளது. நான்கு சக்கர சுழற்சியை தேவைக்கேற்ப பயன் படுத்திக்கொள்ளும் வசதி கொண்டது. இது தவிர வயர்லெஸ் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்டது. இதில் உள்ள ஹார்மன் கார்டோன் சரவுண்ட் சிஸ்டம் 16 ஸ்பீக்கர்களுடன் மிகச் சிறப்பான இசையை அளிக்கிறது. தானியங்கி ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, பிரேக் பிடிப்பதால் உருவாகும் சக்தியை பேட்டரியில் மின்சாரமாக சேமிக்கும் வசதி, எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் உள்ளிட்ட பல வசதி கள் இதில் உள்ளன.

பாதுகாப்புக்கு இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. ஒருங்கிணைந்த பிரேக் வசதி, பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி கொண்டது. குழந்தைகள் பயணிப்பதற்கு ஏற்ப ஐ-சோபிக்ஸ் வசதி உள்ளது.


Next Story