பாதாம் தோலும் அழகு தரும்


பாதாம் தோலும் அழகு தரும்
x

பாதாம் பருப்பை நிறைய பேர் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். ஊறவைத்த பாதாம் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பது போல அதன் தோலும் சரும பராமரிப்புக்கு பயன்படக்கூடியது.

பாதாம் தோலை கொண்டு இறந்த சரும செல்களை உரித்தெடுக்கலாம்.

10 பாதாம் தோலுடன் மூன்று டீஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து தயிரும் கலந்து கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அது சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்களை நீக்கு வதுடன், சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவும்.

பாதாம் தோல் வயதான அறிகுறிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மையும் கொண்டது. சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

10 பாதாம் தோலுடன் 2 டீஸ்பூன் பால், சிறிதளவு மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசலாம். அதனுடன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி விடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.


Next Story