ஆப்பிள் ஹோம்போட்
பிரீமியம் மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் வீடுகளில் பயன்படுத்துவதற்கேற்ற ஹோம்போட் கருவியை அறிமுகம் செய்துள்ளது.
இது இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாடலாகும். இப்போது மேம்பட்ட வடிவமைப்பில் 5 கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. ஆப்பிள் கடிகாரம் சீரிஸ் 7 மாடலில் உள்ள புதிய சிப் இதிலும் உள்ளது.
இது காற்றின் ஈரப்பதம் மற்றும் வீட்டின் அறையில் நிலவும் சூழலை உணர்த்தும். இது 100 சதவீதம் மறு சுழற்சி செய்யப்பட்ட மெஷ் பேப்ரிக் பொருட்களால் ஆனது. இதன் உயரம் 4 அங்குலம். குரல் வழி கட்டுப்பாட்டில் செயல்பட வசதியாக இதில் 4 மைக்ரோ போன்கள் உள்ளன. அறையின் அளவுக்கேற்ப ஒலியின் அளவை மாற்றித் தரும் உணர் சென்சார் இதில் உள்ளது.
இதன் விலை சுமார் ரூ.32,900. பிப்ரவரி 3-ந் தேதி முதல் இது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story