பிரிடேட்டர் ஹீலியோஸ் 300 ஸ்பேஷியல் லேப்ஸ் எடிஷன்
கம்ப்யூட்டர் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் ஏசர் நிறுவனம் வீடியோகேம் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் திறன் மிக்க லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
பிரிடேட்டர் ஹீலியோஸ் 300 ஸ்பேஷியல்லேப்ஸ் எடிஷனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 50 வீடியோ கேம்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. மிகவும் மெல்லிய அளவு கொண்ட தாக இது வந்துள்ளது. இதில் முப்பரிமாண அனுபவத்தை பெற முடியும். இதன் திரை 15.6 அங்குலம் கொண்டது.
இதில் இன்டெல்லின் 12-வது தலைமுறை கோர் ஐ 9 பிராசஸர் மற்றும் 5-வது தலைமுறை ஏரோபிளேடு 3 டி பேன் உள்ளது. இது லேப்டாப் விரைவில் சூடேறுவதைக் குறைக்க உதவும். மேலும் இதில் ஏசர் நிறுவனத்தின் பிரத்யேக கூல்பூஸ்ட் தொழில்நுட்பம் உள்ளது. விண்டோஸ் 11 இயங்குதளத்தில் இது செயல்படும். இதன் விலை சுமார் ரூ.2.55 லட்சம்.
Related Tags :
Next Story