புதிய வண்ணத்தில் ஆடி ஏ 4


புதிய வண்ணத்தில் ஆடி ஏ 4
x

பிரீமியம் சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் ஏ 4 மாடலில் கண்கவர் புதிய வண்ணங்கள், மேம்படுத்தப் பட்ட அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.43.12 லட்சம். பிரீமியம் பிளஸ் மாடலின் விலை சுமார் ரூ.47.27 லட்சம். டெக்னாலஜி மாடலின் விலை சுமார் ரூ.50.99 லட்சம். புதிய மேம்படுத்தப்பட்ட ரகத்தில் டேங்கோ சிவப்பு, மன்ஹாட்டன் கிரே ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 10.1 அங்குல இன்போடெயின்மென்ட் தொடு திரை, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, வயர்லெஸ் சார்ஜிங், 30 பல்வேறு வண்ண விளக்குகள், மூன்று நிலைகளி லான கிளைமேட் கண்ட்ரோல் வசதி, மின்சாரத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான முன்புற இருக்கைகள், பாதுகாப்பான பயணத்திற்கென 6 ஏர் பேக்குகள், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

இது 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. 190 ஹெச்.பி. திறன் மற்றும் 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. இதில் 7 ஸ்பீடு டியூயல் ஆட்டோமேடிக் கிளட்ச் பிளேட் வசதி உள்ளது. இதை ஸ்டார்ட் செய்து 7.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 241 கி.மீ. ஆகும்.


Next Story