ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்... ஜூன் 27 வரையில் வானில் தோன்றும் அதிசய நிகழ்வு...!


ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்... ஜூன் 27 வரையில் வானில் தோன்றும் அதிசய நிகழ்வு...!
x

image credit @NASA

ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள் வானில் தோன்றும் அதிசய நிகழ்வு ஜூன் 27 வரை நடைபெறுகிறது.


சூரியக்குடும்பத்தில் அமைந்துள்ள எட்டு கோள்களும் தங்களுக்கு உரிய வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. நாம் வாழும் பூமி, சூரியை ஒருமுறை முழுவதுமாக சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகிறது.

இதே போல பிற கோள்கள் சூரியனை சுற்றிமுடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் மாறுபடும். அப்படி கோள்கள் சூரியனை சுற்றிவரும்போது, சில சமயங்களில் ஒரே நேர்க்கோட்டில் வரும் அதிசயமும் வானில் நிகழும்.

அந்த வகையில், இப்போது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வினை வரும் 27 ஆம் தேதி வரையில் காணலாம்.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் சூரியனுக்கு மேலே வளைவாக அணிவகுத்து இருக்கும் இந்த ஐந்து கோள்களையும் வெறும் கண்களில் நாம் காணலாம் என்று நாசா தெரிவித்து உள்ளது.

சுமார் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் இதுபோன்று அதிசய நிகழ்வு தோன்றுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இதுபோன்ற நிகழ்வு வானில் தோன்றிய நிலையில், இனி இதுபோன்ற நிகழ்வு 2040 ஆம் ஆண்டு தான் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story