சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய துளை...! ஆத்தாடி எவ்வளவு பெரிய ஓட்டை...! என்ன நடக்குமோ...!


சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய துளை...! ஆத்தாடி எவ்வளவு பெரிய ஓட்டை...! என்ன நடக்குமோ...!
x
தினத்தந்தி 1 April 2023 4:08 PM IST (Updated: 1 April 2023 4:16 PM IST)
t-max-icont-min-icon

சூரியனில் எத்தனை சூரிய புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன என்பதை விஞ்ஞானிகளால் கணக்கிட்டு அதன் செயல்பாடு கண்காணிக்கப்படும்.

வாஷிங்டன்

சூரியனில் மேற்பரப்பில் ராட்சத 'கருந்துளை' ஒன்று விழுந்துள்ளது . இந்தத் கருந்துளையை கரோனல் துளைகள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த துளை பூமியை விட 20 மடங்கு அளவு பெரியது என்றுகூறப்படுகிறது.

இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, "இந்த துளை காரணமாக வெள்ளிக்கிழமைக்குள் பூமியை நோக்கி 1.8 மில்லியன் மைல் வேகத்தில் சூரியக் காற்றைக் கட்டவிழ்த்துவிடும். இதனை தெற்காசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் உணரலாம். இந்த வெடிப்புகளிலிருந்து வெளியேறும் வெப்ப கதிர்கள் ரேடியோ தகவல் தொடர்புகள், விண்கலம், விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும், இந்தத் துளையின் மூலம் பூமியின் மேற்பரப்பில் இன்னும் கூடுதல் இடங்களில் துருவ ஒளிகள் தோன்றலாம்" என்றனர்.

சூரியனில் ஏற்படும் இந்த கரோனல் துளைகள் மிகவும் பொதுவானவை, ஆனால், அவை பெரும்பாலும் சூரியனின் துருவங்களை நோக்கி தோன்றும், அங்கு அவற்றின் சூரிய காற்று விண்வெளியில் வீசப்படும். ஆனால் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சூரியனில் ஏற்படும் மாறுதலுக்கு சூரியன் தயாராகி வருவதால், இந்தத் துளைகள் சூரியனின் பூமத்திய ரேகைக்கு அருகில் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் பேராசிரியர் மேத்யூ ஓவன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, பிப்ரவரி மாதம் சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும்புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது சூரியனில் இரண்டாவது துளை உருவாகி இருக்கிறது.

சூரிய சுழற்சி

சூரியனில் ஏற்படும் இந்த மாற்றங்கள் சுழற்சியானவை. ஒரு சூரிய சுழற்சியின் காலம் பதினொரு ஆண்டுகள். இடையே ஒரு சூரிய சுழற்சி குறைந்தபட்ச மற்றும் ஒரு சூரிய சுழற்சி அதிகபட்சமாகவும் உள்ளது.

சூரிய சுழற்சி என்பது சூரிய காந்த செயல்பாட்டின் சுழற்சியாகும். ஒருமுறை இந்த சுழற்சி நடந்து முடிய சுமார் 11 ஆண்டுகள் ஆகும். சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்தே இது கணக்கிடப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த ஆண்டு வெப்பம் முன்னெப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது.

நாசா கணித்ததை விட சூரியன் இயங்கும் வேகம் அதிகரிப்பு - சூரிய சுழற்சியால் பூமிக்கு பாதிப்பு!

முந்தைய சூரிய அதிகபட்ச காலத்தில் இதுபோன்ற செய்திகளை யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, முந்தைய சூரிய அதிகபட்சம் பற்றிய சமூக ஊடக கவரேஜ் குறைவாக இருந்தது.இரண்டு, இந்த சூரிய சுழற்சி முந்தைய சுழற்சிகளை விட மிகவும் சக்திவாய்ந்தவை என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலிருந்தே இருந்தன.

இத்தகைய தீவிர சூரிய சுழற்சி செயல்பாடு கடந்த பல ஆண்டுகளாக காணப்படவில்லை. இது விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு இந்த சூரிய சுழற்சி அதிகமாக இருக்கும் அதைப் புரிந்து கொள்ள, சூரிய சுழற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் சூரிய ஒளி மற்றும் வெளியேற்றத்தின் நிகழ்வுகள் மற்றும் அவை ஏற்படுத்தக்கூடிய சேதம் மற்றும் பூமியைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


Next Story