ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப் பிட் 280 சி.ஹெச். என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
சதுர வடிவிலான டயலைக் கொண்டதாக நீர்புகா தன்மையுடன் இது அறிமுகமாகியுள்ளது. சிவப்பு, நீலம், கருப்பு நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.1,499.
இதில் 3.55 செ.மீ. முழுமையான திரை உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு உள்ளிட்டவற்றை துல்லியமாக கணக்கிடும். இது புளூடூத் வி 5.0 இணைப்பு வசதி கொண்டது. இதனால் ஸ்மார்ட்போனுடனான தொடர்பு இடையூறின்றி கிடைக்கும். பெடோமீட்டர், கலோரி அளவீடு, தூக்க குறைபாடு, நினைவூட்டல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. ஸ்மார்ட்போன் கேமராவை இதன் மூலம் இயக்க முடியும். நடை, ஓட்டம், சைக்கிள் ஓட்டுவது, ஸ்கிப்பிங், பூப்பந்து, கூடைப்பந்து, கால் பந்து, யோகா, மலையேற்றம், பேஸ்பால் மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும்போது உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் கணக்கிடும்.
இதில் 200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. அலாரம், வானிலை அறிவிப்பு உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
Related Tags :
Next Story