ஐடெல் ஸ்மார்ட்போன்
![ஐடெல் ஸ்மார்ட்போன் ஐடெல் ஸ்மார்ட்போன்](https://img.dailythanthi.com/Articles/2022/Mar/202203242153039460_Idol-smartphone_SECVPF.gif)
ஐடெல் நிறுவனம் அனைத்துத் தரப்பினரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் விதமாக குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஐடெல் ஏ 49 என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை சுமார் ரூ.6,499. இதில் 6.6 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரை உள்ளது.
இதில் 4 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் இயங்குதளம் உள்ளது. மேலும் 1.4 கிகாஹெர்ட் குவாட் கோர் பிராசஸர் உள்ளது.
இதில் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதன் நினைவகத் திறனை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் அதிகரிக்க முடியும். பின்புறமும், முன்புறமும் 5 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. பர்ப்பிள், நீலம், சியான் நிறங்களில் வந்துள்ளது.
Related Tags :
Next Story