அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்; இது முதலை பாசம்! வைரல் வீடியோ
ஒரு பெரிய முதலை ஒரு மனிதன் மீது பாய்ந்து, அவனை நசுக்க முயற்சிக்கிறது.ஆனால், முதலை மனிதனை சாப்பிடவோ கொல்லவோ முயற்சிக்கவில்லை.
வாஷிங்டன்,
அமெரிக்க யூடியூபர் ஜே ப்ரூவர், மிருகக்காட்சி சாலை ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு அவர் வளர்க்கும் பெரிய முதலை ஒரு மனிதன் மீது பாய்ந்து, அவனை நசுக்க முயற்சிக்கிறது. ஆனால், முதலை மனிதனை சாப்பிடவோ கொல்லவோ முயற்சிக்கவில்லை.
டார்த் கேட்டர் என்ற பெரிய ஆண் முதலை தன்னை பராமரிக்கும் ஜேய் என்ற மனிதரை கண்டவுடன் பாசத்தால் அவர் மீது பாந்து அவரை திக்குமுக்காடச் செய்தது. அவர் கீழே விழுந்துவிட, அவர் உடலை முழுவதும் மறைத்தவாறு அணைத்துக் கொண்டது முதலை.
இதனை வீடியோவாக எடுத்து ஜே ப்ரூவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story