34 வகை பனை மரங்கள்


34 வகை பனை மரங்கள்
x
தினத்தந்தி 16 Dec 2021 4:24 PM GMT (Updated: 16 Dec 2021 4:24 PM GMT)

பனை மரம், தமிழகத்தின் மாநில மரமாக விளங்குகிறது. பனை மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து உச்சி வரையில் உள்ள ஒவ்வொரு பகுதியும் மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்தவை.

அதோடு இது வளர்வதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. மேலும் நிலத்தடி நீரை தக்க வைப்பதில் பனை மரத்தின் பங்கு அதிகம். எனவேதான் தமிழ்நாட்டின் மாநில மரமாக பனை மரம் விளங்குகிறது. பனை மரமானது, புல் இனத்தைச் சேர்ந்த தாவரப் பேரினம் ஆகும். இது கிளைகள் மற்றும் வளைவுகள் எதுவும் இன்றி சுமார் 30 அடி வரை வளரக்கூடியது. இதன் ஆயுள் காலமானது, மனிதர்களை விடவும் அதிகமாகும். 

இளம் பனை மரமானது, ‘வடலி’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு பனை மரம் வளர்ந்து, முதிர்ச்சி அடைவதற்கு சுமார் 15 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும். பனையை நாம் பயிரிட வேண்டும் என்ற தேவையில்லை. இயற்கையிலேயே தானாகவே வளர்ந்து பெருகும் ஆற்றல் படைத்தவை, பனை மரங்கள். அப்படிப்பட்ட பனை மரங்களில் 34 வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.

1.ஆண் பனை, 2.பெண் பனை, 3.கூந்தப்பனை, 4.தாளிப்பனை, 5.குமுதிப் பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம் பனை, 8.ஈழப்பனை, 9.சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11.திப்பிலிப்பனை, 12.உடலற்பனை, 13.கிச்சிலிப்பனை, 14.குடைப்பனை, 15. இளம்பனை, 16.கூறைப்பனை, 17.இடுக்குப்பனை, 18.தாதம்பனை, 19.காந்தம்பனை, 20.பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23.குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25.கொண்டைப்பனை, 26.ஏரிலைப்பனை, 27.ஏசறுப்பனை, 28.காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31.வாதப்பனை, 32.அலகுப்பனை, 33. நிலப்பனை, 34.சனம்பனை.


Next Story