கவாஸகி நின்ஜா 1000 எஸ்.எக்ஸ்.
பிரீமியம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் ஜப்பானின் கவாஸகி நிறுவனம் நின்ஜா 1000 எஸ்.எக்ஸ். மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இரண்டு வண்ணங்களில் (எமரால்டு பச்சை, மெட்டாலிக் மேட் கிராபின் ஸ்டீல் கிரே) வந்துள்ளது. நீண்ட தூர பயணத்தை விரும்புவோரின் தேர்வாக இது இருக்கும். மிகவும் ரிலாக்ஸாக அமர்ந்து ஓட்டுவதற்கு வசதியாக சீட்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மிக அழகிய வடிவமைப்பு, சிறப்பான செயல்திறன், வேகம், சிறப்பான மின்னணு தொழில் நுட்பம் ஆகியவை அனைத்தும் இதில் உள்ளது. கவாஸகி நிறுவனத்தின் ரைடியாலஜி செயலியை புளூடூத் இணைப்பு மூலம் இணைத்து பயன் படுத்தலாம்.
இது 1,043 சி.சி. திறன் கொண்ட நான்கு சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. எலெக்ட் ரானிக் வால்வு, எலெக்ட்ரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், மூன்றுவித ஓட்டும் நிலைகள் (ஸ்போர்ட், சாலை, ரைடர்) கொண்டது. 4.3 அங்குல டி.எப்.டி. கலர் திரை உள்ளது. இதில் பிரிட்ஜ்ஸ்டோன் பாட்லாக்ஸ் ஹைபர் ஸ்போர்ட் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story