கியா சோனெட் அனிவர்சரி எடிஷன்


கியா சோனெட் அனிவர்சரி எடிஷன்
x
தினத்தந்தி 30 Oct 2021 2:47 PM IST (Updated: 30 Oct 2021 2:47 PM IST)
t-max-icont-min-icon

ஹூண்டாய் குழுமத்தின் அங்கமான கியா மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான சோனெட் மாடல் காரின் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களைக் கொண்டதாக வந்துள்ளது. பெட்ரோல் மாடல் 1 லிட்டர் என்ஜினைக் கொண்டதாகவும், டீசல் மாடல் 1.5 லிட்டர் என்ஜினைக் கொண்டதாகவும் வந்துள்ளது. முன்புற, பின்புற பம்பர் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் ஸ்கிட் பிளேட் உள்ளது. எல்.இ.டி. முகப்பு விளக்கு, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, குரூயிஸ் கண்ட்ரோல் வசதி கொண்டது.

இதில் 10.25 அங்குல தொடு திரை உள்ளது. முன்புறம் இரண்டு ஏர் பேக் உள்ளது. அத்துடன் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. இ.எஸ்.சி. மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் மாடல் என்ஜின் 120 ஹெச்.பி. திறனையும், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப் படுத்தும். மேனுவல் மாடல் 6 கியர்களைக் கொண்டதாகவும், ஆட்டோமேடிக் மாடல் 7 கியர்களைக் கொண்டதாகவும் வந்துள்ளது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100 ஹெச்.பி. திறனையும், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். டீசல் மாடல் 6 கியர்களைக் கொண்டது.


Next Story