யமஹா பேசினோ 125 ஹைபிரிட்


யமஹா பேசினோ 125 ஹைபிரிட்
x
தினத்தந்தி 4 Aug 2021 5:30 PM IST (Updated: 4 Aug 2021 5:30 PM IST)
t-max-icont-min-icon

யமஹா நிறுவனம் பேசினோ 125 ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

யமஹா நிறுவனம் பேசினோ 125 ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (எஸ்.எம்.ஜி.) உள்ளது. இது வாகன செயல்பாட்டை மேம்படுத்தும் விதமாக குறைந்த அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதனால் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ் டரில் தேவையான தகவல்கள் கிடைக்கும். பொதுவாக கார்களில் மட்டுமே ஹைபிரிட் மாடல் உள்ளது. தற்போது ஸ்கூட்டரில் இத்தகைய வசதியை யமஹா அறிமுகம் செய்துள்ளது.

மேலும் முந்தைய மாடல் 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். புதிய ஹைபிரிட் மாடல் 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப் படுத்தும். சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நகர சாலைகளில் 57.8 கி.மீ. தூரமும், நெடுஞ்சாலைகளில் 64.2 கி.மீ. தூரமும் ஓடி எரிபொருள் சிக்கனமான வாகனமாக பெயர் பெற்றுள்ளது.

டிஸ்க் பிரேக் மாடலில் எல்.இ.டி. முகப்பு விளக்கு உள்ளது. அத்துடன் பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு உள்ளது. டிஜிட்டல் டிஸ்பிளே, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. 9 கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.

Next Story