தேசிய கீதத்தை இயற்றியவர் ரவீந்தரநாத் தாகூர்
ரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள பல்துறை அறிஞர் ஆவார். இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தார்.
ரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள பல்துறை அறிஞர் ஆவார். இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தார். இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காள தேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1861-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி கொல்கத்தாவில் தேவேந்திரநாத் தாகூர்- சாரதா தேவி தம்பதியினருக்கு மகனாக ரவீந்தரநாத் தாகூர் பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தாய் இறந்தார். இவரின் தந்தையும் வியாபார நோக்கில் அடிக்கடி வெளிநாடு சென்றதால் பெரும்பான்மையான நேரங்களில் பணியாளர்களாலேயே வளர்க்கப்பட்டார். வங்காள மறுமலர்ச்சியில் இவரின் குடும்பம் பெரும் பங்காற்றியது. இவரின் குடும்பம் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு நிறுவனம் மற்றும் திரையரங்கம் போன்றவற்றை நடத்தி வந்தனர். அங்கு தொடர்ச்சியாக வங்காளம் மற்றும் நவீனத்துவ மரபார்ந்த பாடல்கள் பாடப்பட்டன. தாகூரின் தந்தை தொழில்முறை துருபாத் இசைக் கலைஞர்களை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து குழந்தைகளுக்கு இந்திய இசைகளை கற்றுத்தந்தார். வரைதல், உடற்கூறியல், புவியியல், வரலாறு, இலக்கியம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் தாகூர் கற்று தேர்ந்தார்.
பின்னர், பிப்ரவரி 1873-ம் ஆண்டு இவரது தந்தையுடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.
ரவீந்தரநாத் தாகூர் தனது 8-வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். 16-வது வயதில் இவரது முதலாவது கவிதைத் தொகுதியை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார். 1877-ம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் இவரது பெயரிலேயே வெளிவந்தன. தாகூர் ஆங்கிலேய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவர் தனது போர்க்குணத்தை, போராட்டத்தை ஓவியங் களின் மூலமாகவும், கேலிச் சித்திரங்களின் மூலமாகவும், எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். மேலும் இவர் விசுவபாரதி பல்கலைக்கழகத்தையும் நிறுவினார். இவரது நூல்களில் சிலவற்றை த.நா.குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1880-ம் ஆண்டில் அவர் வங்காளம் திரும்பினார். பிறகு, தொடர்ந்து கவிதைகள், கதைகள் மற்றும் புதினங் களை அவர் வெளியிட்டார். இவை வங்காளத்தினுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின, ஆனால் தேசிய அளவில் அவை கவனத்தைப் பெறவில்லை. 1883-ம் ஆண்டில் டிசம்பர் 9-ந்தேதி மிருனாலி தேவி என்பவரை மணந்தார். அவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 குழந்தைகள் இறந்து விட்டன. இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவர் தான். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். தாகூரின் படைப்புகள் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்து தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது. 2000-க்கும் மேலான பாடல்கள் எழுதியுள்ளார். அதில் சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். இவருடைய பாடல்களை விவேகானந்தர் தொகுத்து வடிவமைத்துள்ளார்.
1915-ம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசாங்கம் தாகூருக்கு ‘சர்’ பட்டம் வழங்கி அவரை கவுரவித்தது. 1919-ம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவத்தைக் கேட்டதும் தமக்கு ஆங்கிலேயர் அளித்த ‘சர்’ பட்டத்தை திரும்பி ஒப்படைத்தார்.
1930-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி அவருடைய நண்பர் டாக்டர் மென்டெல் மூலம் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவருடைய வீட்டில் தாகூர் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பாரத நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார். சீனா, ஜப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். 1940-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. நாட்கள் செல்ல செல்ல அவரது உடல் பலவீனம் அடைந்தது. அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி 1941-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி ரவீந்தரநாத் தாகூர் மறைந்தார்.

Related Tags :
Next Story