யமஹா பேசினோ 125 ஹைபிரிட்

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் யமஹா நிறுவனம் பேசினோ மாடலில் 125 எப்.ஐ. ஹைபிரிட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இரண்டு வேரியன்ட்களில் அறிமுகமாகியுள்ள இதில் ஹைபிரிட் அதாவது மின்சாரத்தில் இயங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவில் இதில் மின்சார சக்தி உருவாகுவதால் ஸ்டார்ட் செய்யும்போது ஏற்படும் சிறு அதிர்வுகூட இதில் இருக்காது.
இது ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொண்டது. 8.2 பி.எஸ். திறனை 6,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (எம்.எம்.ஜி.) சிஸ்டம் உள்ளது. இதில் உள்ள மின் மோட்டார், வாகனத்தை நிறுத்தியதில் இருந்து ஆக்சிலரேட்டர் கொடுக்கும்போது சீராக இயங்க உதவும்.
சப்தமின்றி என்ஜின் ஸ்டார் செய்ய உதவும் தொழில்நுட்பம், தானியங்கி ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் வசதி, சைடு ஸ்டாண்டு இருந்தால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத நுட்பம் ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும்.
இதில் மேம்பட்ட எல்.இ.டி. விளக்கு, பகலில் ஒளிரும் விளக்கு ஆகியன உள்ளன. புளூடூத் இணைப்பு வசதி, யமஹா மோட்டார் சைக்கிள் கனெக்ட் எக்ஸ் செயலி, டிஸ்க் பிரேக் வசதி போன்ற அம்சங்களும் இடம் பெற்றிருக் கின்றன. 9 கண் கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.
Related Tags :
Next Story