ஆர்பட் ஸ்மார்ட் மின் விசிறி
ஆர்பட் நிறுவனம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் ஸ்மார்ட் மின்விசிறியை அறிமுகம் செய்துள்ளது.
மின் அழுத்த வேறுபாட்டிலும் சிறப்பாக செயல்படும். இதன் விலை சுமார் ரூ.3,100. இதில் பி.எல்.டி.சி. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான மின்விசிறிகள் 75 வாட் மின்சாரத்தில் செயல்படும். ஆனால் ஆர்பட் ஸ்மார்ட் மின் விசிறிகள் 28 வாட் மின்திறனில் அதற்கு இணையான காற்றை அளிக்கும். இதனால் 65 சதவீத அளவுக்கு மின்சாரம் மிச்சமாகும். மின் அழுத்த வேறு பாட்டை சமாளிக்கும் விதமாக 160 வோல்ட் முதல் 260 வோல்ட் வரையில் செயல்படும். இது 379 முதல் 380 ஆர்.பி.எம். சுழற்சி கொண்டது.
இதில் எல்.இ.டி. விளக்கு வசதி உள்ள மாடலும் கிடைக்கும். ஸ்லீப், பூஸ்டர் மற்றும் டைமர் வசதியும் உள்ளது. சப்தமின்றி சுழலும். இதில் ஆன்டி பாக்டீரியல் நுட்பம் உள்ளதால் இது 99.2 சதவீதம் நுண்கிருமிகளிலிருந்து பாதுகாப்பளிக்கக்கூடியது.
Related Tags :
Next Story