ஜெப்ரோனிக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்


ஜெப்ரோனிக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்
x
தினத்தந்தி 24 Jun 2021 11:07 AM IST (Updated: 24 Jun 2021 11:07 AM IST)
t-max-icont-min-icon

ஜெப்ரோனிக்ஸ் நிறுவனம் இஸட்.இ.பி. பிட் 4220. சி.ஹெச். என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்து உள்ளது.

பிட்னெஸ் பிரியர்களுக்கு மிகவும் உபயோகமான இந்த ஸ்மார்ட் கடிகாரத்தை ஸ்மார்ட்போனுடன் இணைத்து விட்டால், அழைப்புகளுக்கு பதில் சொல்லவும், மறுமுனையில் பேசுபவரது குரலைக் கேட்கவும் வசதியாக ஸ்பீக்கரும், மைக்கும் உள்ளன.

இது 1.3 அங்குல டி.எப்.டி. திரையைக் கொண்ட வட்ட வடிவிலான கடிகாரமாகும். 7 வகையான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் காட்டும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவையும், ரத்த அழுத்த அளவையும் காட்டும். தூக்க குறைபாட்டையும் அளவிடும். மணிக் கட்டு அசைவு மூலம் ஸ்மார்ட்போனின் கேமராவை கட்டுப்படுத்தமுடியும்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் செயல்படும். கருப்பு ஸ்டிராப், கருப்பு மேல்பாகம் கொண்டதாகவும் சில்வர் நிறத்திலும் இது வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,999.

Next Story