மோல்கியூல் ஏர் பியூரிபயர்
அமெரிக்காவைச் சேர்ந்த மோல்கியூல் நிறுவனம் புதிதாக ஏர் மினி பிளஸ் என்ற பெயரிலான ஏர் பியூரிபயரை அறிமுகம் செய்துள்ளது.
போட்டோ எலெக்ட்ரோகெமிக்கல் ஆக்ஸிடேஷன் (பெகோ) தொழில்நுட்பம் கொண்டது. கொரோனா வைரஸ் மற்றும் பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரப்பும் வைரஸ்களை வடிகட்டும் திறன் கொண்டது. 23 சதுர மீட்டர் அளவிலான அறையை சுத்தப்படுத்தும். இதில் உள்ள காற்றாடி 5 வித சுழற்சியைக் கொண்டது.
இதன் வேகத்தை தானாகவே நிர்ணயித்துக் கொள்ளும் நுட்பம் கொண்டது. காற்றாடி சுழலும் சப்தம் கேட்காத அளவிற்கு இது வடிவமைக்கப் பட்டுள்ளது. பூஞ்சை, காளான், வைரஸ், பாக்டீரியா உள்ளிட்டவற்றை வடிகட்டும். இதன் விலை சுமார் ரூ.36,999.
Related Tags :
Next Story