போட் வயர்லெஸ் இயர்போன்


போட் வயர்லெஸ் இயர்போன்
x
தினத்தந்தி 28 April 2021 10:35 PM IST (Updated: 28 April 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஆடியோ சார்ந்த சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமாகத் திகழும் போட் நிறுவனம் புதிதாக ஏர்டோப்ஸ் 701 ஏ.என்.சி. என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் சுற்றுப்புற இரைச்சலைத் (30 டெசிபல் வரை) தவிர்க்கும் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் உள்ளது. வியர்வை, தண்ணீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டது. இதில் உள்ள சார்ஜிங் கேஸில் 28 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின் திறனை சேமித்து வைக்கும் பேட்டரி உள்ளது.

இதில் உள்ள பேட்டரி 5 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் செயல்படும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 5½ மணி நேரம் தொடர்ந்து செயல்படும். இதன் விலை சுமார் ரூ.3,990.


Next Story