வோல்வோ சி 40 பேட்டரி எஸ்.யு.வி. கூபே


வோல்வோ சி 40 பேட்டரி எஸ்.யு.வி. கூபே
x
தினத்தந்தி 10 March 2021 6:25 PM IST (Updated: 10 March 2021 6:25 PM IST)
t-max-icont-min-icon

வோல்வோ நிறுவனம் முழுவதும் பேட்டரியில் இயங்கும் வகையில் தனது சி 40 மாடல் காரை உருவாக்கியுள்ளது.

சொகுசு கார்களைத் தயாரிக்கும் சுவீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனம் முழுவதும் பேட்டரியில் இயங்கும் வகையில் தனது சி 40 மாடல் காரை உருவாக்கியுள்ளது. எஸ்.யு.வி. மாடலாக இது அறிமுகமாகியுள்ளது. இரட்டை மோட்டார் இணைப்பு வசதியைக் கொண்டிருப்பதால் இது 408 ஹெச்.பி. திறன் மற்றும் 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்து வதாக அமைந்துள்ளது.

இதில் 78 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளதால் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 418 கி.மீ. தூரம் வரை ஓடும். சொகுசு கார்களுக்கான அதிகபட்ச வரி விதிப்பு பேட்டரி கார்களுக்கு இல்லை. இதனால் பேட்டரி சொகுசு கார்களை வாங்கும் ஆர்வம் இந்தியாவில் அதிகரிக்கும் என இந்நிறுவனம் நம்புகிறது. ஒவ்வொரு சக்கரத்தின் அச்சின் மீது மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இதை ஸ்டார்ட் செய்து 4.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை தொட்டு விட முடிவது கூடுதல் சிறப்பாகும்.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கி.மீ. ஆகும். இதில் உள்ள பேட்டரியின் 80 சதவீத அளவானது 40 நிமிடத்தில் சார்ஜ் ஆகிவிடும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் தொடுதிரை உள்ளது. இது கூகுளுடன் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.

Next Story