இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்தது எப்படி? ஆய்வில் புதுமையான தகவல்


இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்தது  எப்படி? ஆய்வில் புதுமையான தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2020 9:55 AM IST (Updated: 9 Nov 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

உலகின் பிற நாடுகளின் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.

புதுடெல்லி,

உலகின் பிற நாடுகளின் மக்கள் தொகையோடு ஒப்பிடும் போது  இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. அதேபோல், இந்தியாவில் இறப்பு விகிதமும் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவலும் செப்டம்பர் மாதத்தில் உச்சம் தொட்ட பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. 

தொற்று பரவலுக்கு அரசின் விதிமுறைகளை மக்கள் தவறாது கடைபிடிப்பதே காரணம் என நீங்கள் கருதினால் அது சரியானது அல்ல. ஏனெனில், சமீபத்திய ஆய்வுகள் முற்றிலும் மாறுபட்ட தகவல்களை தந்துள்ளன. அதாவது, இந்திய மக்களிடையே காணப்படும் சுகாதாரமற்ற  பழக்க வழக்கங்களும் தொற்று பரவல் குறைவாக இருப்பதற்கு ஒரு  காரணம் என்று சமீபத்திய  ஆய்வு தெரிவித்துள்ளது.  அதாவது சுகாதாரமற்ற பழக்க வழக்கங்களால் இந்திய மக்களிடம் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதாக ஆய்வு கூறுகிறது. 

 எனினும், இந்தியாவில் தொற்று பரவல் குறைய இது மட்டுமே காரணம் இல்லை எனவும் அதிக நுண்ணுயிரிகளை வெளிப்படுத்துவது தொற்றுநோயைத் தடுக்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதேவேளையில் சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கிடையே, பிஜிசி தடுப்பூசி போடுவதால் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறைகிறதா? என்பது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். 

Next Story