வானவில் : டெலிபன்கனின் 32 அங்குல ஸ்மார்ட் டி.வி.
வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள டெலிபன்கன் நிறுவனம் புதிய ரக ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. 32 அங்குல அளவில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் டி.வி. விலை சுமார் ரூ.9,990 ஆகும். இதனை புளூடூத் இணைப்பு மூலம் செயல்படுத்தலாம்.
டெலிபன்கன் டி.எப்.கே. 32 கியூ.எஸ். என்ற பெயரில் இது விற்பனைக்கு வந்துள்ளது. இதில் சினிமா மோட் என்ற வசதி உள்ளது. இதை இயக்கினால் திரையரங்கில் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை வீட்டினுள்ளேயே இந்த டி.வி. மூலம் பெற முடியும். இதில் குவாட் கோர் கேமரா பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம் கொண்டு உள்ளது.
இது ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டது. இதில் ஸ்ட்ரீம்வால் யு.ஐ. இணைப்பு உள்ளது. இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மூவி பாக்ஸ் இணைப்பு வழங்கப்படும். இதன் மூலம் 700 திரைப்படங்களை பார்க்க முடியும்.
இதில் ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளம் உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுக்கென தனி செயலிகளான ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லைவ், வூட், ஏ.எல்.டி. பாலாஜி மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்டவற்றின் செயலி மூலமும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியும். இதில் 20 வாட் ஸ்பீக்கர் உள்ளது. புளூடூத் இணைப்பு மூலம் ஹெட்போனிலும் டி.வி. நிகழ்ச்சிகளை மற்றவர் கேட்காத வகையில் காதில் அணிந்தும் கேட்டு மகிழலாம். இதில் 2 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட், ஒரு ஆப்டிகல் அவுட்புட் உள்ளிட்டவையும் உள்ளன.
Related Tags :
Next Story