வானவில் : டிஜிட்டல் டிராயிங் டேப்லெட்
குழந்தைகளின் கற்பனைத் திறன் முதலில் ஓவியமாகத்தான் வெளிப்படும். முன்பெல்லாம் காகிதங்களில் கலர் கலராக கிறுக்குவதும், வரைவதும் குழந்தைகளுக்கு வழக்கம். இது ஸ்மார்ட் யுகம்.
சிறு குழந்தைகளே ஸ்மார்ட்போனுக்கு பரிச்சயமாகிவரும் சூழலில் அவர்களது கற்பனைத் திறனை மெருகேற்ற வந்துள்ளது டிஜிட்டல் டேப்லெட். ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான மிஜியா பிராண்டில் இது வெளி வந்துள்ளது. மிஜியா எல்.சி.டி. டிஜிட்டல் டிராயிங் டேப்லெட் என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது.
இது 10 அங்குலம் மற்றும் 13.5 அங்குல அளவுகளில் வந்துள்ளது. 10 அங்குல டிஜிட்டல் டிராயிங் டேப்லெட்டின் விலை 6 டாலராகும் (சுமார் ரூ.420). மற்றொரு மாடலின் (13.5 அங்குலம்) விலை 14 டாலராகும் (ரூ.1,000). குழந்தைகளின் கண்களை கூசாத வகையில் வெளிச்சம் பரவும் வகையில் இதன் எல்.சி.டி. திரை உள்ளது. மேலும் எளிதில் கையாளும் வகையில் எடை குறைவாக (7 கிராம்) உள்ளது. காகிதத்தில் வரைவது போலவே இதிலும் வரைய முடியும். எல்.சி.டி. திரையின் பின்புறம் உறுதியான ஏ.பி.எஸ். பிளாஸ்டிக்கால் ஆனது. இதில் வரைவதற்கு காந்தத்தினால் ஆன பேனாவும் தரப்படுகிறது. வழக்கமான சிலேட்டுகளில் படம் வரையும்போது சாக்பீஸ் துகள்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.
ஆனால் இதில் அந்தப் பிரச்சினையும் ஏற்படாது. ஒரு நாளைக்கு 100 முறை கூட இதில் படங்களை வரைந்து அழித்துக் கொள்ளலாம். இதில் உள்ள பேட்டரி ஒரு ஆண்டு முழுவதும் உழைக்கும்.
Related Tags :
Next Story