தமிழக அரசு வேலைவாய்ப்புகள்


தமிழக அரசு வேலைவாய்ப்புகள்
x
தினத்தந்தி 27 Aug 2019 10:31 AM (Updated: 27 Aug 2019 10:31 AM)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு மட்டும் 89 காலியிடங்கள் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

ஹோம்சயின்ஸ், சைகாலஜி, சோசியாலஜி, சைல்டு டெவலப்மென்ட், புட் அண்ட் நியூட்ரிசியன், சோசியல் ஒர்க், ரெகபில்லிடேசன் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவி இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நியூட்ரீசியன், ஹோம்சயின்ஸ் பட்டப்படிப்புடன், ரூரல் சர்வீஸ் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் செப்டம்பர் 11-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 16,17-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Next Story