பிப்ரவரி மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 43% சரிவு


பிப்ரவரி மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 43% சரிவு
x
தினத்தந்தி 9 March 2019 12:10 PM IST (Updated: 9 March 2019 12:10 PM IST)
t-max-icont-min-icon

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

பிப்ரவரி மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 43 சதவீதம் சரிவடைந்து 1.42 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

எண்ணெய் வித்துக்கள்

எள், கடுகு, பருத்தி விதை, சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 5.5 சதவீதம் வளர்ச்சி கண்டு 2.84 லட்சம் டன்னாக இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2.70 லட்சம் டன்னாக இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 43 சதவீதம் குறைந்து 1.42 லட்சம் டன்னாக இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 பிப்ரவரி) புண்ணாக்கு ஏற்றுமதி சற்றே உயர்ந்து 27.87 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 27.65 லட்சம் டன்னாக இருந்தது.

முதல் 11 மாதங்களில் கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி அதிகபட்சமாக 9.63 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 5.39 லட்சம் டன்னாக இருந்தது.

பிப்ரவரி வரையிலான 10 மாதங்களில் வியட்நாம் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி (6.38 லட்சம் டன்னில் இருந்து) 5.43 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. தென் கொரியாவிற்கான ஏற்றுமதி 6.86 லட்சம் டன்னாக சரிந்துள்ளது. தாய்லாந்திற்கான ஏற்றுமதி (1.74 லட்சம் டன்னில் இருந்து) 2.79 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் புண்ணாக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. பிரான்ஸ் நாட்டுக்கான ஏற்றுமதி (1.37 லட்சம் டன்னில் இருந்து) 1.06 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

சோயா புண்ணாக்கு

பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் மொத்தம் 3 லட்சம் டன் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி ஆகி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 23 ஆயிரம் டன் அளவிற்கே இருந்தது. 

Next Story