ஆதித்யா பிர்லா எம்.எப். நிறுவனத்தின் புதிய பரஸ்பர நிதி திட்டம் அறிமுகம்


ஆதித்யா பிர்லா எம்.எப். நிறுவனத்தின் புதிய பரஸ்பர நிதி திட்டம் அறிமுகம்
x
தினத்தந்தி 24 Jan 2019 7:04 AM GMT (Updated: 24 Jan 2019 7:04 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

ஆதித்யா பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்டு நிறுவனம், புதிய பரஸ்பர நிதி திட்டம் (என்.எப்.ஓ) ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது.

பால் பவிஷ்யா யோஜ்னா

ஆதித்யா பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்டு நிறுவனம் ஆதித்யா பிர்லா சன் லைப் பால் பவிஷ்யா யோஜ்னா எனும் சேமிப்பு சார்ந்த திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளுக்காக சேமிக்க விரும்பும் முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்ப காலம் கடந்த 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. அடுத்த மாதம் 5-ந் தேதி வரை இத்திட்டத்தில் சேர முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். இது கட்டாய முதலீட்டுக் கால வரையறை இல்லாத ‘ஓப்பன் என்டட்’ திட்டமாகும். இதில் ‘வெல்த்’ மற்றும் ‘சேவிங்ஸ்’ எனும் இரண்டு வகையான முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன.

வெல்த் பிரிவின் கீழ் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதியில் 65 சதவீதம் வரை பங்கு மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களிலும், மீதமுள்ள நிதி நிலையான வருவாய் திட்டங்களிலும், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் வெளியிடும் யூனிட்டுகளில் முதலீடு செய்யப்பட உள்ளது.

சேவிங்ஸ் பிரிவில், திரட்டப்படும் நிதியில் 75 முதல் 90 சதவீதம் வரை கடன் மற்றும் பணச்சந்தைகளிலும், மீதமுள்ள நிதி பங்குகளிலும், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் வெளியிடும் யூனிட்டுகளில் முதலீடு செய்யப்படும்.

இத்திட்டத்தில் குறைந்தபட்ச விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000 ஆகும். அதன் பிறகு ரூ.1 என்ற மடங்கில்தான் விண்ணப்பிக்க முடியும். இது கட்டாய முதலீட்டுக் கால வரையறை இல்லாத ‘ஓப்பன் என்டட்’ திட்டமாகும்.

ஓரளவு பாதுகாப்பானது

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த நிபுணர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றன. புதிய பங்கு வெளியீடுகளிலும் பங்கேற்கின்றன. புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் நேரடியாக இறங்குவதைக் காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது ஓரளவு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

Next Story