பசும் பொன்னின் மாணிக்கம்


பசும் பொன்னின் மாணிக்கம்
x
தினத்தந்தி 30 Oct 2018 9:01 AM (Updated: 30 Oct 2018 9:01 AM)
t-max-icont-min-icon

இன்று (அக்டோபர் 30-ந் தேதி) பசும்பொன் முத்து ராம லிங்கத் தேவர் பிறந்த தினம்.

1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓர் சிற்றூர். அழகிய கிராமம் பசும்பொன். அப்போது தமிழகத்தின் மிக முக்கிய ஆளுமைகளாக இருந்த மூவர்் அங்கு காரில் வந்து இறங்கினர்். ஒரு சேர அவர்களை பார்த்ததால் ஆரவாரிக்கும் பெரும் கூட்டம் அவர்்களுடன் கண்ணீரை பகிர்ந்தது. காரில் வந்தவர்கள் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்்., எஸ்.எஸ்.ஆர். ஆகியோர்். அனைவர்் விழிகளையும் ஈரமாக்கி விட்டு முத்து ராமலிங்க தேவர்் அங்கு சடலமாகி இருந்தார்்.

55 வயது வரை வாழ்ந்த தேவரின் தாய் ஒரு இந்து. தேவர் குழந்தையாக இருந்தபோதே தாய் இறந்ததால் ஆயிஷா பீவி என்ற இஸ்லாமிய அன்னையிடம் தாய்ப்பால் பருகி னார்். அவர் பயின்றதோ அமெரிக்க மிஷன் ஆரம்பப்பள்ளி, மதுரை ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப்பள்ளிகளாகும். எம் மதமும் சம்மதம் என்று அவர்் வாழ்வு அமைந்தது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ஒரு முஸ்லீம் கூட தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டாம், நான் காப்பாற்றுவேன் என்றார் தேவர்். தென் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்த அவர் இந்திய வரலாற்றை தீர்மானித்த நிகழ்வும் உண்டு. 1939-ல் காங்கிரஸ் தலைவர்் தேர்தலில் பட்டாபி சீத்தாராமையாவும் நேதாஜியும் போட்டி இட்டனர். பட்டாபி தோற்றால் தன் தோல்வி என்ற நிலையை காந்திஜி எடுத்தார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேதாஜி வென்றார்். இந்தியாவிலேயே நேதாஜிக்கு அதிக வாக்குகள் தந்த மாநிலம் தமிழகம் ஆகும். இங்கு தேவர்் நேதாஜிக்காக களம் இறங்கினார். பின் நாட்களில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை அனுப்பினார். விடுதலைப் போரில் பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக தேவர்் இருந்தார்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலய பிரவேசத்தில் தேவரின் பங்கு முக்கியமானது. அப்போதைய தமிழகத்தில் வழிபாட்டு உரிமை சாதியாக பிரிந்து இருந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், கூடல் ‘அழகர்’ பெருமாள் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், திருகுற்றாலநாதர்(குற்றாலம்) கோவில் ஆகியவற்றில் நுழைவதை சாதி வாரியான தீண்டாமை தடுத்தது. திருவாரூர் தியாகராஜர் ஆலயம், ராமேசுவரம் கோவில் ஆகியவற்றிலும் சாதி பாகுபாடு இருந்தது. இவற்றை எதிர்த்து தேவர் முழங்கினார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய பிரவேசம் நடந்தபோது ராஜாஜி முதல்-அமைச்சராக இருந்தார். ஒடுக்கப்பட்ட சாதியினர் கோவில் உள்ளே நுழைவதை சிலர் கடுமையாக எதிர்்த்தனர். மதுரை எட்வர்டு ஹாலில் ஆலய பிரவேச நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது. அதில் தேவர் கலந்து கொண்டு துண்டு பிரசுரம் வெளியிட்டார்.“அந்த ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாத ஐயர் அரிஜனங்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து வருவார். அப்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடி கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் பாதுகாப்புக்கு நானே உத்திரவாதம்” என்றார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த தேவர்் தொழிலாளர்் உரிமைகளுக்காகவும் சிறை சென்றார். பசுமலையில் மகாலட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்். ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி போன்றோரும் நிர்வாகிகளாக இருந்தனர். இச்சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர்் சங்கமும் இணைந்து போராடின. பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்்களை மீண்டும் பணியில் அமர்்த்தும் போராட்டத்தில் தேவர்் சிறை சென்றார்். சிறை அனுபவங்கள் அவருக்கு பல உண்டு. 1930 -களில் குறிப்பிட்ட சாதியினரை குற்ற பரம்பரையாக பாவிக்கும் அடக்குமுறைச் சட்டம் இருந்தது. மாலையில் காவல் நிலையத்தில் ஆஜராகி ரேகை வைத்து விடியும் வரை காவல் நிலையத்தில் கைதிகளாக அவர்்கள் கிடந்தனர். இச்சட்டத்தை ரத்து செய்ய தேவர் பெரும் கிளர்ச்சிகளை நடத்தினார்்.

1937-களில் பிரமலை பகுதியில் ஒரு ஜல்லிக்கட்டு நடந்தது. அதை வேடிக்கை பார்க்கும் ஆவலில் ஆங்கில அரசின் ஆளுநர் வந்தார். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடிய தேவர்் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். இங்கு ஜல்லிக்கட்டு நடக்க கூடாது. மைதானத்திற்கு ஒரு மாடோ அல்லது மனிதனோ போக கூடாது என்றார். ஒரு பறவை கூட அங்கு பறக்காமல் மைதானம் வெறிச்சோடியது. ஆளுநர் ஏமாற்றத்தோடு திரும்பினார்். 1952,57 களில் நடந்த தேர்தலில் இரு தொகுதிகளில் நின்று வாக்கு கேட்க போகாமலே வாகை சூடினார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் மணி கணக்கில் பேசும் ஆற்றலை தேவர் பெருமகன்் பெற்று இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தை பூச விழாவில் கலந்து கொண்டு வள்ளலாரின் கருத்துகளை விளக்கிப் பேசுவார். சுவரொட்டி விளம்பரம் தோரணம் இல்லாமல் தன் பெயருக்காகவே லட்சக்கணக்கானோரை திரட்டிய தேவர்் 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி இறந்தார். அவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே தேதியில்தான். தேவர் ஜெயந்தியும் குரு பூஜையும் ஒரே நாளில் நடக்கிறது.் தேவரை சிறப்பித்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ எடை தங்க காப்பு அணிவித்தார்். சிறு பிள்ளையாக இருந்த போது தேவர்் தனியே அறையில் அடைந்து கிடப்பாராம். அவர் இறந்த போது எங்களை தனிமையில் விட்டு விட்டீர்களே என்று லட்சக்கணக்கானோர் கண்ணீருடன் தவித்தனர். ஜமீன் பரம்பரை குடும்பத்தில் பிறந்தாலும் எளிய வாழ்க்கை நடத்தினார்.அவர் வருமானத்தில் பெரும் பகுதியை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே செலவிட்டார்.ஒரு சமயம் காசி பல்கலைக்கழகத்தில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையில் நடந்தவிழாவில் 3 மணி நேரம் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் பிரமிக்க வைத்தார். தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.கவால் பாராட்டப்பட்ட பசும் பொன்னின் மாணிக்கமான தேவர் திருமகனின் புகழ் வரலாறு உள்ளவரை நிலைத்திருக்கும்.

-வக்கீல் வெ. ஜீவகுமார்

Next Story