உலக கோப்பை வில்வித்தை போட்டி - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா


உலக கோப்பை வில்வித்தை போட்டி - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
x
தினத்தந்தி 23 April 2022 3:46 AM IST (Updated: 23 April 2022 3:46 AM IST)
t-max-icont-min-icon

உலக கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி, இங்கிலாந்து இணையை சந்திக்கிறது.

அங்காரா,

உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 1) துருக்கியில் நடந்து வருகிறது. இதில் ரிகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியா ஜோடி, ஸ்பெயின் இணையை எதிர்கொண்டது.

இதில் இந்தியாவின் தருண்தீப் ராய்-ரிதி போர் ஜோடி 5-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி, இங்கிலாந்து இணையை சந்திக்கிறது.

Next Story