டோக்கியோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு நிறுத்திவைப்பு!


டோக்கியோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு நிறுத்திவைப்பு!
x
தினத்தந்தி 29 Aug 2021 10:24 PM IST (Updated: 29 Aug 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

டோக்கியோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ, 

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியில் 6-வது நாளான இன்று நடந்த டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் எப்52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார்  வெண்கலம் வென்றார். 

இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு, வகைப்பாடு கண்காணிப்பு காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டிக்கான வெற்றி விழா நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


Next Story