ஒலிம்பிக்: ஆண்கள் வில்வித்தை காலிறுதியில் இந்திய அணி தோல்வி


ஒலிம்பிக்: ஆண்கள்  வில்வித்தை காலிறுதியில் இந்திய அணி  தோல்வி
x
தினத்தந்தி 26 July 2021 6:50 AM GMT (Updated: 26 July 2021 6:50 AM GMT)

பலம் வாய்ந்த தென் கொரிய அணியிடம் இந்தியா 6-0 என்ற புள்ளி கணக்கில் தோற்றது

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணிக்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தான் ஆண்கள் அணியை எதிர்கொண்டது.

இந்திய ஆண்கள் அணியில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தரூன்தீப் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போட்டி தொடங்கியது முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இந்திய ஆண்கள் அணி 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் ஆண்கள் அணியை வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் அணி வில்வித்தை போட்டியில்  காலிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. காலிறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தென்கொரியாவை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த தென் கொரிய அணியிடம் இந்தியா 6-0 என்ற புள்ளி கணக்கில்  தோற்றது 

பேட்மிண்டன் இரட்டையர் போட்டியில் இந்திய இணை தோல்வியை தழுவியது.

பலம் வாய்ந்த இந்தோனேஷிய அணிக்கு எதிராக சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட்களில் தோற்றனர். முதல் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தியிருந்தனர்.

டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றோடு வெளியேறினார். இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி. போர்ச்சுகல் வீராங்கனையிடம் 4-0 என தோற்றார்.

Next Story