வேலைக்கார பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது
கோவண்டியில் வேலைக்கார பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
கோவண்டியில் வேலைக்கார பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலைக்கார பெண் கற்பழிப்பு
மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்தவர் சோயிப் போர்கர் (வயது29). இவர் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் உடல் நலம் பாதித்த தாயை கவனிக்க மான்கூர்டு பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணை வேலைக்கு அமர்த்தினார். அந்த பெண் தினந்தோறும் வாலிபரின் வீட்டுக்கு வந்து அவரின் தாயை கவனித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் கோவண்டி பகுதியில் உள்ள நர்சிங் ஹோம் பின்புறத்திற்கு அப்பெண்ணை வரச்சொன்னார். அங்கு வாலிபர், பெண்ணுக்கு போதை பொருள் கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்தார். அந்த பானத்தை குடித்த பிறகு, போதையில் இருந்த பெண்ணை வாலிபர் கற்பழித்தார். மேலும் அவர் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து கொண்டார். நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் ஆபாச படத்தை சமூகவலைதளத்தில் பரப்பி, குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டினார்.
வாலிபர் கைது
மேலும் அவர் தொடர்ந்து பெண்ணை மிரட்டி கற்பழித்து வந்தார். இந்தநிலையில் சம்பவம் குறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண்ணை மிரட்டி கற்பழித்து வந்த வாலிபர் சோயிப் போர்கரை கைது செய்தனர்.
-