ரசாயன ஆலை தீ விபத்தில் தொழிலாளி பலி


ரசாயன ஆலை தீ விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 Jun 2023 7:00 PM GMT (Updated: 10 Jun 2023 7:00 PM GMT)

அம்பர்நாத் ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி தொழிலாளி பலியானார். காயமடைந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தானே,

அம்பர்நாத் ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி தொழிலாளி பலியானார். காயமடைந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடீர் தீ விபத்து

தானே மாவட்டம் அம்பர்நாத் எம்.ஐ.டி.சி வளாகத்தில் உள்ள ரசாயன ஆலையில் நேற்று மாலை 4 மணி அளவில் ரசாயனம் சேமிக்கப்பட்டு உள்ள தொட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பற்றிய தீ மற்ற இடங்களுக்கு வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இந்த தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 4 தொழிலாளிகள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அம்பர்நாத், ஆனந்த்நகர், உல்லாஸ்நகர் பகுதியில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்தனர்.

தொழிலாளி பலி

அவர்கள் உள்ளே சிக்கி இருந்த 4 பேரை மீட்டனர். இதில் பலத்த தீக்காயமடைந்து ஒரு தொழிலாளி உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 3 தொழிலாளிகளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதன்பின்னர் அங்கு பற்றிய தீயை வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story