காட்கோபர் கட்டிட தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
காட்கோபர் கட்டிட தீ விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மும்பை,
மும்பை காட்கோபர் கிழக்கு பகுதியில் உள்ள மாதவ் கட்டிடத்தில் கடந்த சனிக்கிழமை மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் கோர்சி தேகியா உயிரிழந்தார். மேலும் 65 சதவீதம் தீக்காயம் அடைந்த தனியார் நிறுவன மற்றொரு ஊழியர் அஞ்சலி பிவால்கர் (வயது47) ஐரோலியில் உள்ள தேசிய தீக்காய மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தாா். இதனால் காட்கோபர் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல தீ விபத்தில் காயமடைந்த தனியார் பயிற்சி மைய மாணவர்கள் இதிஷ் சகாத் (18), தன்யா காம்ளே (18) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேருக்கும் கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் 20 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story