பாண்டுப்பில் பச்சிளங்குழந்தையை விட்டு சென்ற பெண் கைது


பாண்டுப்பில் பச்சிளங்குழந்தையை விட்டு சென்ற பெண் கைது
x
தினத்தந்தி 7 Sept 2023 1:00 AM IST (Updated: 7 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பாண்டுப்பில் பச்சிளங்குழந்தையை விட்டு சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

பாண்டுப்பில் பச்சிளங்குழந்தையை விட்டு சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை மீட்பு

மும்பை பாண்டுப் வணிகவளாகம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தின் படிக்கட்டில் கடந்த 2-ந்தேதி துணியால் பொதியப்பட்ட நிலையில் பச்சிளங்குழந்தை ஒன்று அழுதுகொண்டு இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு விசாரித்தனர். இதில், அது பிறந்து 4 நாட்களே ஆன பெண் பச்சிளங்குழந்தை என தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை அங்கு விட்டுச்சென்றவர் யார் என்பது குறித்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர்.

பெண் கைது

இதில், 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குழந்தையை அங்கு விட்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அவரை அடையாளம் கண்டுபிடித்தனர். பின்னர் அவரை பிடித்து விசாரித்தனர். பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் பொருளாதார ரீதியாக சிரமம் அடைந்து வந்துள்ளார். இதனால் தனக்கு பிறந்த குழந்தையை வளர்க்க முடியாமல் அங்கு போட்டு சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story