நானார் சுத்திகரிப்பு ஆலையை மராட்டியத்துக்கு வரவிடாமல் தடுத்தது யார்?- தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி


நானார் சுத்திகரிப்பு ஆலையை மராட்டியத்துக்கு வரவிடாமல் தடுத்தது யார்?- தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி
x

ரூ.3½ லட்சம் கோடி நானார் சுத்திகரிப்பு ஆலையை மராட்டியத்துக்கு வரவிடாமல் தடுத்தது யார்? என தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

மும்பை,

ரூ.3½ லட்சம் கோடி நானார் சுத்திகரிப்பு ஆலையை மராட்டியத்துக்கு வரவிடாமல் தடுத்தது யார்? என தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

வேதாந்தா விவகாரம்

வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து மராட்டியத்தில் பிரமாண்ட செமிகன்டக்டர் தயாரிப்பு ஆலையை அமைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் திடீரென இந்த ஆலை திட்டம் குஜராத் மாநிலத்திற்கு சென்றது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பதாவது:-

சுத்திகரிப்பு ஆலை

அரசியல் ஆதாயத்திற்காக எதிர்மறை, தவறான, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது. அவர்களின் இயலாமையை மறைக்கவே இது போன்ற செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது. மராட்டியத்துக்கு வரவிருந்த ரூ.3.5 லட்சம் கோடி சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை திருப்பி அனுப்பியது யார் என எதிர்க்கட்சி தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன். இந்த தலைவர்களுக்கு நான் கூறும் அறிவுரை எல்லாம் தகுதி, திறமையை வளர்த்து கொள்ள கவனம் செலுத்துங்கள். எதிர்மறை, நம்பிக்கையின்மையில் கவனம் செலுத்த வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் தேவேந்திர பட்னாவிஸ் மராட்டியத்தில் முதலீடு செய்வோம் என உறுதி அளித்த வேதாந்தா நிறுவனத்துக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர், "மராட்டியத்துடன் ஒருங்கிணைந்து முன்னெடுத்து செல்ல நீங்கள் எடுத்த முடிவை வரவேற்கிறோம். நாங்கள் எப்போதும் தகுதியான மற்றும் தொழில் தொடங்க ஏதுவான மாநிலமாக இருப்போம்" என கூறியுள்ளார்.

வேதாந்தா நிறுவனம் விளக்கம்

குஜராத்தில் செமிகன்டக்டர் ஆலை தொடங்குவது தொடர்பாக வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால் விளக்கம் அளித்து உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், "தொழில் தொடங்குவது தொடர்பாக நாங்கள் குஜராத், கர்நாடகா, மராட்டியம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை தேர்வு செய்து இருந்தோம். இந்த மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு நாங்கள் தொழில் தொடங்க மிகச்சிறந்த ஆதரவை தந்தன. எனினும் எங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததால் நாங்கள் குஜராத்தை தேர்வு செய்தோம். கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தின் போது மராட்டிய தலைமை தங்கள் மாநிலத்தில் நாங்கள் தொழில் தொடங்க பெரும் முயற்சி செய்தது. பல சலுகைகளையும் தந்தனர். ஆனால் நிபுணர்கள் ஆலோசனையின்படி குஜராத்தில் தொழில் தொடங்க முடிவு செய்தோம். மராட்டியத்திலும் முதலீடு செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம்." என கூறியிருந்தார்.


Next Story