2 மாதத்தில் 4-வது முறையாக விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரெயில்


2 மாதத்தில் 4-வது முறையாக விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரெயில்
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:45 PM GMT)

2 மாதத்தில் 4-வது முறையாக வந்தே பாரத் ரெயில் விபத்தில் சிக்கியது.

மும்பை,

மும்பை - காந்திநகர் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை 2 மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் கால்நடைகளால் விபத்துகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக குஜராத் பகுதிகளில் மாடுகள் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது வந்தே பாரத் ரெயில் அதன் மீது மோதும் சம்பவங்கள் தொடந்து நடந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் 4-வது முறையாக வந்தே பாரத் ரெயில் மாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதுதொடர்பாக மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்குர் கூறுகையில், "வந்தே பாரத் ரெயில் உத்வாடா - வாபி இடையே மாலை 6.23 மணியளவில் 87-வது கிராசிங் கேட் அருகில் கால்நடை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக ரெயிலின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. ஆனால் சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ரெயில் 6.35- மணிக்கு சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டுவிட்டது. முன்பகுதியில் ஏற்பட்ட சேதம் விரைவில் சரி செய்யப்படும்" என்றார்.


Next Story