5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு காணாமல் போய்விடும்- மத்திய மந்திரி நிதின் கட்கரி நம்பிக்கை

5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு காணாமல் போய்விடும்- மத்திய மந்திரி நிதின் கட்கரி நம்பிக்கை
x

5 ஆண்டுகளில் நாட்டில் பெட்ரோல் காணாமல் போய்விடும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மும்பை,

5 ஆண்டுகளில் நாட்டில் பெட்ரோல் காணாமல் போய்விடும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

பெட்ரோல் காணாமல் போய்விடும்

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காி மராட்டிய மாநிலம் அகோலாவில் உள்ள டாக்டர் பன்ஜப்ராவ் கிரிஷி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது:-

முழு நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன், இன்னும் 5 ஆண்டுகளில் பெட்ரோல் நாட்டில் இருந்து காணாமல் போய்விடும். உங்கள் ஸ்கூட்டர் அல்லது கார்கள் பசுமை ஹைட்ரஜன், எத்தனால், சி.என்.ஜி. அல்லது எல்.என்.ஜி. போன்ற பசுமை எரிபொருளில் தான் இயக்கப்படும்.

விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 12 முதல் 20 சதவீதம் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உழைக்குமாறு வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்களை கேட்டு கொள்கிறேன்.

மராட்டியத்தில் உள்ள விவசாயிகள் மிகவும் திறமையானவர்கள். புதிய தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள் குறித்து அவர்களுக்கு வழிகாட்டுதல், பயிற்சி தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story