மணிப்பூர் விவகாரத்தால் சட்டசபையில் கடும் அமளி


மணிப்பூர் விவகாரத்தால் சட்டசபையில் கடும் அமளி
x
தினத்தந்தி 21 July 2023 7:45 PM GMT (Updated: 21 July 2023 7:45 PM GMT)

மணிப்பூர் விவகாரத்தால் நேற்று சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.

மும்பை,

மணிப்பூர் விவகாரத்தால் நேற்று சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.

விவாதம் நடத்த மறுப்பு

மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று கூட்டத்தொடர் தொடங்கியவுடன் மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் மறுப்பு தெரிவித்தார். மேலும் சம்பவம் குறித்து பேசவும் எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பெண் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

இதனால் ஆவேசமடைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் மைய பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சட்டசபை வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Next Story