சமூகத்தின் எல்லா பிரிவினருக்காகவும் மாநில அரசு 24 மணி நேரமும் உழைக்கிறது - தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு


சமூகத்தின் எல்லா பிரிவினருக்காகவும் மாநில அரசு 24 மணி நேரமும் உழைக்கிறது - தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 16 Aug 2023 12:30 AM IST (Updated: 16 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சமூகத்தின் எல்லா பிரிவினருக்காகவும் மாநில அரசு 24 மணி நேரமும் உழைக்கிறது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,

சமூகத்தின் எல்லா பிரிவினருக்காகவும் மாநில அரசு 24 மணி நேரமும் உழைக்கிறது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

24 மணி நேர உழைப்பு

சுதந்திரதினத்தையொட்டி துணை முதல்-மந்திரி ேதவேந்திர பட்னாவிஸ் நாக்பூரில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:- மராட்டிய அரசு சமூகத்தில் உள்ள எல்லா பிரிவுக்காகவும் 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. அரசு மக்களின் வாழ்வை மாற்ற வேலை செய்து வருகிறது. பிரதமர் மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவில், மராட்டியம் 1 டிரில்லியன் டாலர் பங்கு வகிக்கும். மராட்டிய அரசு சிறந்த பொருளாதாரத்தை கொண்டு இருப்பதாக வெளிநாட்டு வங்கி அறிக்கை கூறியுள்ளது. மராட்டிய பொருளாதாரம் சிறந்தது மட்டுமல்ல, அது சமூகத்தில் எல்லா தரப்பையும் தூக்கி செல்லும் வகையில் வலுவானது. இவ்வாறு அவர் கூறினார்.

கட்சிரோலியில் முதலீடு

இதேபோல கட்சிரோலியில் நடந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பேசும்போது, "நமது நாடு பிரதமர் மோடியின் தலைமையின் கீழும், மராட்டியம் ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழும் சமூகத்தின் கடைசி நபரின் கனவுகளை கூட நிறைவேற்றி வளர்ச்சி பாதையில் செல்லும் என உறுதியாக நம்புகிறேன். கட்சிரோலியை முதலீடு செய்யும் இடமாக அரசு மாற்றும். அங்கு தொழில்துறையில் அதிக முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.


Next Story