பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை 17-ந் தேதி கூடுகிறது
மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் வருகிற 17-ந் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் வருகிற 17-ந் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
17-ந்தேதி மழைக்கால கூட்டத்தொடர்
மராட்டிய பா.ஜனதா கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்து உள்ளதால் மாநில அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 17-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. நேற்று நடந்த சட்டசபை அலுவலக ஆய்வு குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், புதிதாக அரசில் இணைந்து உள்ள துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி சகன் புஜ்பால் கலந்து கொண்டனர்.
மந்திரி சபை விரிவாக்கம்
சட்டசபை கூட்டத்தொடருக்கு முன் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெற வாய்ப்பில்லை என பா.ஜனதா கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் அடுத்த சில நாட்களில் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறும் என ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மந்திரி சபையில் பா.ஜனதா, சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இணைக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.