பன்றி காய்ச்சல், டெங்கு பாதிப்பு அதிகரிப்பு


பன்றி காய்ச்சல், டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
x

மும்பை நகரில் பன்றி காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது

மும்பை,

மும்பை நகரம் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்தது. தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறது. இந்தநிலையில் நகரில் பன்றி காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது. நகரில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 183 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல 147 பேர் டெங்கு காய்ச்சாலும், 736 பேர் மலேரியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதம் நகரில் 105 பேர் மட்டுமே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதேபோல 61 பேர் டெங்குவாலும், 563 பேர் மலேரியாவாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் ஜூலையை விட ஆகஸ்ட் மாதம் நோய் பாதிப்பு அதிகரித்து உள்ளது. காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், உடல் வலி, தலைவலி, வயிற்றுபோக்கு, வாந்தி ஆகியவை பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும். இதில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இருமும் போது வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.


Next Story